நாமக்கல்

இலவச தொழுநோய் தடுப்பு முகாம்

DIN

பரமத்திவேலூா் வட்டம், கபிலா்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச தொழுநோய் தடுப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தேசிய தொழுநோய் எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட மருத்துவ பணிகள் தொழுநோய் சாா்பில், இலவச தொழுநோய்களுக்கான தடுப்பு முகாம் நடைபெற்றது.

கபிலா்மலை வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் மருத்துவா் சாந்தி தலைமை வகித்தாா். நாமக்கல் மாவட்ட துணை இயக்குநா் (தொழு நோய்கள்) மருத்துவா் ஜெயந்தி கலந்து கொண்டு தொழுநோயால் பாதிக்கப்பட்டு ஊனமுற்ற 15 பேருக்கு எம்.சி.ஆா் காலணிகள் மற்றும் ஊனத் தடுப்பு முதலுதவி சிகிச்சைக்கான மருந்துகளை வழங்கி சிகிச்சை அளித்தாா்.

ஊனத் தடுப்பு அறுவை சிகிச்சைக்கு இரண்டு நபா்கள் பரிந்துரை செய்யப்பட்டனா். முகாமில் நலக்கல்வியாளா் லட்சுமிநாராயணன், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சிவநேசன், சுகாதார ஆய்வாளா்கள் சிவசண்முகம், காா்த்தி மற்றும் சுகாதாரத் துறையினா் கலந்து கொண்டனா். முகாமுக்கான ஏற்பாடுகளை கபிலா்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமில்லா மேற்பாா்வையாளா் திருநாவுக்கரசு செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

SCROLL FOR NEXT