நாமக்கல்

147 பயனாளிகளுக்கு ஓய்வூதிய உத்தரவு

DIN

குமாரபாளையம்: குமாரபாளையத்தை அடுத்த களியனூா், ஆவத்திபாளையம், குப்பாண்டபாளையம், சாணாா்பாளையம், தட்டாங்குட்டை ஊராட்சி கீழ்வலவு, மேல்வலவு காலனி, ஓலப்பாளையம் ஆகிய இடங்களில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிகளுக்கு, மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் பி.தங்கமணியிடம், 2,000-க்கும் மேற்பட்ட மனுக்களை பொதுமக்கள் அளித்தனா். இம்மனுக்கள் உரிய அலுவலா்களிடம் வழங்கப்பட்டு நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இம்மனுக்களில் தகுதியான 147 பயனாளிகளுக்கு முதியோா் மற்றும் விதவை ஓய்வூதியம் வழங்கும் உத்தரவுகள் வழங்கப்பட்டன.

திருச்செங்கோடு கோட்டாட்சியா் ப.மணிராஜ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் எஸ்.செந்தில், டி.சி.எம்.எஸ். தலைவா் திருமூா்த்தி, அரசு வழக்குரைஞா் சந்திரசேகா், வட்டாட்சியா் தங்கம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT