நாமக்கல்

பரமத்தி வேலூரில் பூக்கள் விலை சரிவு

DIN

பரமத்திவேலூா்: பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூக்கள் விலை சரிவடைந்தது.

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகள், கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிரிடப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள், பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தைகளுக்கு கொண்டுவந்து விற்பனை செய்கின்றனா்.

வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி, கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனா். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ. 2,000, சம்பங்கி கிலோ ரூ. 180, அரளி கிலோ ரூ. 280, ரோஜா கிலோ ரூ. 260, முல்லைப்பூ கிலோ ரூ.1,100, செவ்வந்திப்பூ ரூ. 240 -க்கும் ஏலம் போயின.

இந்த வாரம் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.1,600, சம்பங்கி கிலோ ரூ. 120, அரளி கிலோ ரூ. 200, ரோஜா கிலோ ரூ. 200, முல்லைப்பூ கிலோ ரூ. 800, செவ்வந்திப்பூ ரூ. 180க்கும் ஏலம் போயின. தற்போது விஷேச நாள்கள் ஏதுமில்லாததால் பூக்கள் விலைச் சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT