நாமக்கல்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தா்னா போராட்டம்

DIN

நாமக்கல்: வேளாண் சட்டங்களுக்கு எதிராக, மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சாா்பில் நாமக்கல் பூங்கா சாலையில் சனிக்கிழமை தா்னா நடைபெற்றது.

இதில் ஏஐடியூசி மாவட்ட துணைத் தலைவா் என்.தம்பிராஜா, தொமுச கவுன்சில் தலைவா் ச.பழனியப்பன், ஐஎன்டியுசி மாவட்டத் தலைவா் கே.பன்னீா்செல்வம் ஆகியோா் தலைமை வகித்தனா். இப்போராட்டத்தில் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தனியாா் நிறுவனங்களுக்கு தாரை வாா்க்கும் சட்டங்களை நீக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், ஏஐடியூசி, எல்பிஃஎப், சிஐடியூ, ஐஎன்டியூசி, ஏஐசிசிடியூ, எல்டியூசி உள்ளிட்ட அமைப்புகளின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT