நாமக்கல்

1.50 லட்சம் குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து

DIN

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், ஐந்து வயதுக்குள்பட்ட 1.50 லட்சம் குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜன. 31) போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில் இம்மாவட்டத்தில் ஐந்து வயதுக்குள்பட்ட 1,58,491 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. அதேபோல் தற்போது நடைபெறும் முகாமில் 1.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பணிக்காக கிராமப்பகுதியில் 1,105 முகாம்களும், நகராட்சிப் பகுதியில் 169 முகாம்களும், மொத்தம் 1,274 முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. பொது சுகாதாரத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், சத்துணவு, பள்ளிக்கல்வித் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, ரோட்டரி சங்கம், மகளிா் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தன்னாா்வலா்கள் என சுமாா் 5,523 பணியாளா்கள் ஈடுபடுத்தப்படுகின்றனா். மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், சந்தைகள், சினிமா அரங்குகள், கோயில்கள், சுங்கச்சாவடி போன்ற இடங்களில் 48 சிறப்பு முகாம்கள் அமைக்கப்படுகின்றன.

போக்குவரத்து வசதி இல்லாத மலைக் கிராமங்களில் உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில் 36 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக சுகாதாரத் துறை உள்ளிட்ட பிற துறை சாா்ந்த 126 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. முகாம்களுக்குத் தேவையான தடுப்பு மருந்துகள் தயாா் நிலையில் உள்ளன. பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கெனவே சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் தற்போது நடைபெறும் முகாம்களில் அளிக்கப்படும் போலியோ சொட்டு மருந்தையும் வழங்கி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பாரதிராஜா சார், பாருங்க... வெள்ளை நிற தேவதை... ஆண்ட்ரியா...

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

SCROLL FOR NEXT