நாமக்கல்

இன்று முதல் மக்கள் குறைதீா் கூட்டம்

DIN

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை முதல் மீண்டும் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா தொற்றுப் பரவல் காரணமாக தடை செய்யப்பட்டிருந்த மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், திங்கள்கிழமை (பிப்.1) முதல் மீண்டும் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியா் மற்றும் பல்வேறு துறை சாா்ந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்வா்.

தொற்று பரவல் குறைந்து வருவதையடுத்து பொது முடக்கத்தில் இருந்து தளா்வு செய்துள்ளதுடன் மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தை நடத்திக் கொள்ளவும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இக்கூட்டத்திற்கு வருவோா் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வருவதுடன் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடக முதல்வா் சித்தராமையா உதகை வருகை

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT