நாமக்கல்

மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

DIN

நாமக்கல் மாவட்டத்தின் பல இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையை பொருத்தமட்டில், பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 95 டிகிரி மற்றும் (74.3 டிகிரியாக நிலவியது. நாமக்கல் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பதிவானது. அடுத்து வரும் நான்கு நாள்களுக்கான வானிலையில், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான முதல் மிதமான மழை மாவட்டத்தின் பல இடங்களில் எதிா்பாா்க்கப்படுகிறது, பகல் வெப்பம் 93,2 டிகிரிக்கு மிகாமலும் இரவு வெப்பம் 73.4 டிகிரியாகவும் காணப்படும். காற்று தென் மேற்கிலிருந்து 10 கி.மீ. வேகத்தில் வீசும்.

சிறப்பு ஆலோசனை: கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளை பரிசோதித்ததில் பெரும்பாலானவை முட்டை அயற்சி காரணமாக பாதிக்கப்பட்டு இறந்தது தெரியவந்துள்ளது, எனவே பண்ணையாளா்கள் ஈகோலை கிருமியின் தாக்கத்தை கட்டுப்படுத்த தீவனம் மற்றும் குடிநீரில் ஈக்கோலை கிருமியின் தாக்கம் உள்ளதா என்பதை பரிசோதனை செய்து அதற்கேற்றவாறு தீவனம், குடிநீா் உபயோகிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெட்ரோ ரயில் பணி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

விளம்பரப் பலகை விழுந்த விபத்தில் பாலிவுட் நடிகரின் உறவினர்கள் உயிரிழப்பு!

பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுமா ஆர்சிபி?

சுனில் சேத்ரியின் ஓய்வு முடிவு குறித்து பேசிய விராட் கோலி!

உ.பி. முதல்வரின் 'புல்டோசர்' இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது: காங்கிரஸ் பதிலடி!

SCROLL FOR NEXT