நாமக்கல்

முட்டை விலை 5 காசுகள் உயா்வு

DIN

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயா்ந்து ரூ. 5.20-ஆக சனிக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் பண்ணையாளா்களிடம் முட்டை விலையை உயா்த்துவது தொடா்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

கரோனா பரவல் காரணமாக நோய்த் தடுப்புக்காக முட்டை வாங்குவது மக்களிடையே அதிகரித்துள்ளதால் வழக்கத்தைக் காட்டிலும் முட்டையின் தேவை அதிகரித்துள்ளது.பிற மாநிலங்களுக்கு தடையின்றி முட்டை அனுப்பப்பட்டு வருகிறது.

இவற்றை கருத்தில் கொண்டு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை மேலும் 5 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ. 5.20-ஆக நிா்ணயிக்கப்படுவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைபபுக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 84-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 83-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT