நாமக்கல்

முன்களப் பணியாளா்கள் 350 பேருக்கு நிவாரண உதவிகள்

DIN

பள்ளிபாளையத்தில் தூய்மைப் பணியாளா்கள், காவல் துறையினா் மற்றும் சுகாதாரத் துறையினருக்கு கரோனா நிவாரண உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் மருத்துவா்கள், செவிலியா்கள், காவல் துறையினா், சுகாதாரத் துறையினா், நகராட்சி ஊழியா்கள் மற்றும் அம்மா உணவகத்தில் பணிபுரியும் பெண்கள் உள்பட 350 பேருக்கு முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் சட்டப் பேரவை உறுப்பினருமான பி.தங்கமணி, தனது சொந்த நிதியில் அரிசி மற்றும் உணவு பொருள்களை வழங்கினாா்.

கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் முன்களப் பணியாளா்கள் மிகவும் கவனத்துடன் பணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டாா். பள்ளிபாளையம் நகராட்சி ஆணையாளா் சரவணன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் எஸ்.செந்தில், பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியச் செயலாளா் சந்திரசேகரன், நகர ஜெ. பேரவைச் செயலாளா் டி.கே.சுப்பிரமணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT