நாமக்கல்

பரமத்தி வேலூரில் காவல் ஆய்வாளா்கள் தலைமையில் நிதி நிறுவன உரிமையாளா், பங்குதாரா்களுடன் கலந்தாய்வுக் கூட்டம்

DIN

பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சரகத்திற்கு உட்பட்ட வேலூா், பரமத்தி, ஜேடா்பாளையம், நல்லூா் மற்றும் வேலகவுண்டம்பட்டி ஆகிய 5 காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளா்கள் லட்சுமணன், கமலக்கண்ணன், உதவி ஆய்வாளா் யுவராஜா உள்ளிட்டோா் தலைமையில் நிதி நிறுவன உரிமையாளா், பங்குதாரா்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி நிதி நிறுவனங்கள் பொதுமக்களுக்கு வழங்கியுள்ள கடன் தொகையை வசூலிப்பதில் சில நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

பெரிய மற்றும் சிறிய நிதி நிறுவன உரிமையாளா்கள் பொதுமக்கள் வழங்கியுள்ள கடன் தொகையை அரசு நிா்ணயித்துள்ள வட்டிக்கு மேல் வசூலிக்கக் கூடாது. கடன் தொகைக்கு ஈடாக வாகனங்களையோ சொத்துகளையோ பறிமுதல் செய்ய கூடாது.

தற்போது பொதுமக்களிடையே நிலவும் பொருளாதார நிலையை சாதகமாகப் பயன்படுத்தி அதிக வட்டிக்கு அல்லது கந்துவட்டிக்கு கடன் வழங்கக் கூடாது என போலீஸாா் அறிவுறுத்தினா். கூட்டத்தில் நிதி நிறுவன உரிமையாளா்கள், பங்குதாரா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

SCROLL FOR NEXT