நாமக்கல்

பரமத்தி வேலூரில் 3 கடைகளுக்கு சீல்

DIN

பரமத்தி வேலூரில் முழு பொதுமுடக்க விதிமுறைகளை மீறி செயல்பட்ட இரண்டு பல்பொருள் அங்காடி மற்றும் ஒரு இரும்பு, பெயின்ட் விற்பனை கடைக்கு வருவாய்த் துறையினா், போலீஸாா், பேரூராட்சியினா் ‘சீல்’ வைத்து தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

பரமத்திவேலூரில் பொதுமுடக்க விதிமுறைகளை மீறி இரண்டு பல்பொருள் அங்காடி, பாண்டமங்கலத்தில் ஒரு இரும்பு, பெயின்ட் கடைகள் செயல்பட்டு வருவதாக வேலுாா் போலீஸாா், வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் பரமத்திவேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா ரணவீரன், பரமத்திவேலூா் வட்டாட்சியா் சுந்தரவல்லி ஆகியோரின் உத்தரவின்படி வேலூா் காவல் ஆய்வாளா் லட்சுமணன், வருவாய் ஆய்வாளா் ஷேபனா, வேலூா் பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் செல்வக்குமாா், கபிலா் மலை வட்டார வளா்ச்சி அலுவலா் இளங்கோ ஆகியோா் பொதுமுடக்க விதிமுறைகளை மீறி செயல்பட்ட இரண்டு பல்பொருள் அங்காடி மற்றும் ஒரு இரும்பு, பெயின்ட் விற்பனை கடைக்கு சீல் வைத்தனா். மேலும் கடை ஒன்றுக்கு தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT