முகப்பு
தனியார் விற்பனை அங்காடியில் ஏற்பட்ட தீவிபத்து.
நாமக்கல்

நாமக்கல் தனியார் விற்பனை அங்காடியில் பயங்கர தீ விபத்து

நாமக்கல்லில் தனியார் விற்பனை அங்காடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
தனியார் விற்பனை அங்காடியில் ஏற்பட்ட தீவிபத்து.
பகிர்:

நாமக்கல்லில் தனியார் விற்பனை அங்காடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.

நாமக்கல்- திருச்சி சாலையில் கிரீன்ஸ் என்ற பெயரில் தனியார் விற்பனை அங்காடி செயல்பட்டு வருகிறது. இங்கு அனைத்து வகையான வீட்டு உபயோகப் பொருட்களும் விற்பனைக்கு உள்ளன. ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 12 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

இதைப் பார்த்த சாலையில் சென்றோர் நாமக்கல் தீயணைப்பு துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். தீ மளமளவென எரிந்ததால் அருகில் செல்ல முடியாமல் தீயணைப்பு துறையினர் தவித்தனர். பல மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சாம்பலானது. உயிர் சேதமோ, காயம் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து நாமக்கல் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →