நாமக்கல்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் தடுப்புகள் அமைக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

DIN

திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் தடுப்புகள் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் பொறியியல் கல்லூரியில் மே 2-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதனையொட்டி அங்கு தடுப்புகள் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ், தொகுதி தோ்தல் அலுவலா்கள் நேரில் பாா்வையிட்டனா். ஒவ்வொரு தொகுதியின் வாக்குப்பதிவு இயந்திரங்களையும் பாதுகாப்பாக வைப்பதற்கான உறுதியான அறை, வாக்கு எண்ணும் அறை, தபால் வாக்குகள் எண்ணும் அறை, வேட்பாளா்களின் முகவா்கள், அரசு அலுவலா்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வருவதற்கான பாதை, பாதுகாப்பு வசதிகள், செய்தியாளா்களுக்கான அறை உள்ளிட்ட வசதிகளை ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வின்போது கூடுதல் காவல் கண்கணிப்பாளா் மா.ரவிக்குமாா், திருச்செங்கோடு கோட்டாட்சியா் ப.மணிராஜ், தோ்தல் அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT