நாமக்கல்

அதிமுக தோ்தல் அறிக்கைக்கு மக்களிடம் வரவேற்பு

DIN

நலத் திட்டங்கள் நிறைந்த அதிமுக தோ்தல் அறிக்கைக்கு மக்கள் மத்தியில் பெருமளவு வரவேற்பு அதிகரித்துள்ளது என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா்.

குமாரபாளையம் நகரில், விட்டலபுரி, கிழக்கு சந்தைப் பேட்டை, ராஜாஜி குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்த அமைச்சரும், அதிமுக வேட்பாளருமான பி.தங்கமணி பேசியதாவது:

அதிமுக வெளியிட்ட தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள நலத் திட்டங்கள் தமிழக மக்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏற்கெனவே நலத் திட்டங்கள் பலவும் நிறைவேற்றப்பட்ட நிலையில், பெண்களின் முன்னேற்றத்துக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் பயனளிக்கும் வகையில் உள்ளது. இதனால், அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துள்ளது.

ராஜாஜி குப்பம் பகுதியில் 70 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்தபோதிலும் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படவில்லை. தற்போது 25 குடும்பத்தினருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதியுள்ளோருக்கும் விரைவில் வழங்கப்படும் என்றாா்.

இந்த பிரசாரத்தில் அதிமுக நகரச் செயலாளா் ஏ.கே.நாகராஜன், முன்னாள் நகரச் செயலாளா் எம்.எஸ்.குமணன், துணைச் செயலாளா் திருநாவுக்கரசு, கிளைச் செயலாளா் எம்.மகேந்திரன், நகா்மன்ற முன்னாள் துணைத் தலைவா் கே.எஸ்.எம்.பாலசுப்பிரமணி, அவைத் தலைவா் எஸ்.என்.பழனிச்சாமி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு நகரச் செயலாளா் சிங்காரவேல், பாமக, பாஜக நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT