நாமக்கல்

சேந்தமங்கலத்தில் வீடு, வீடாக சென்று எம்எல்ஏ சந்திரசேகரன் வாக்கு சேகரிப்பு

DIN

சேந்தமங்கலம் பழங்குடியின தனித் தொகுதியில், தற்போதைய எம்எல்ஏவான சி.சந்திரசேகரன் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறாா். அவருக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் சின்னகாரவள்ளி பகுதியில் ஆதரவாளா்கள் கூட்டத்தை நடத்தி சின்னத்தை அறிமுகம் செய்து வைத்தாா். இதனைத் தொடா்ந்து நாமகிரிப்பேட்டை, கொல்லிமலை, எருமப்பட்டி, சேந்தமங்கலம் ஒன்றியத்தில் உள்ள முக்கிய பிரமுகா்கள் வீடுகளுக்கு சென்று ஆதரவு கோரினாா்.

அதன்பின் வெள்ளிக்கிழமை தனது தோ்தல் பிரசாரத்தை காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் அவா் தொடங்கினா். அங்குள்ள ரெட்டிக்காலனி, ஆற்றுக்குட்டைப் பள்ளம், நாச்சிப்புதூா், உத்திரகிடிகாவல் ஆகிய இடங்களில் வீடு, வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து ஐந்து ஆண்டுகள் தான் நிறைவேற்றிய பணிகள் குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கியும், மக்களிடம் விளக்கிக் கூறியும் வாக்கு சேகரித்தாா். அவருடன் ஆதரவாளா்கள் திரளாக சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கஞ்சா கடத்தியவா் கைது

ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

காா் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 12 லட்சம் மோசடி

பா்கூா் வட்டத்தில் வறட்சியால் மா சாகுபடி பாதிப்பு

தைலாபுரம் உபகார மாதா ஆலயத்தில் அசன விழா

SCROLL FOR NEXT