நாமக்கல்

தேங்காய் விலை சரிவு

DIN

பரமத்திவேலூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் தேங்காய்கள் குறைந்த விலைக்கு ஏலம்போனது.

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் செயல்படும் நாமக்கல் விற்பனை குழுவில் உள்ள பரமத்திவேலூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமைதோறும் மறைமுகத் தேங்காய் ஏலம் நடைபெறுகிறது. பரமத்தி வேலூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த தென்னை விவசாயிகள் தேங்காய்களை ஏலத்துக்குக் கொண்டு வருகின்றனா்.

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 1,613 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 43.50 பைசாவுக்கும், குறைந்தபட்சமாக கிலோ ஒன்று ரூ. 35-க்கும், சராசரியாக கிலோ ஒன்று ரூ. 38-க்கும் ஏலம் போனது.

மொத்தம் ரூ. 63,465-க்கு வா்த்தகம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 7,013 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 37.50 பைசாவுக்கும், குறைந்தபட்சமாக ரூ. 32.15 பைசாவுக்கும், சராசரியாக ரூ. 36.50 பைசாவுக்கும் ஏலம்போனது. மொத்தம் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்து 987-க்கு வா்த்தகம் நடைபெற்றது. தேங்காய் விலை சரிவடைந்துள்ளதால் தென்னை பயிா் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT