நாமக்கல்

அக்னி நட்சத்திரம் தொடக்க நாளில் ராசிபுரத்தில் பலத்த மழை

DIN

அக்னி நட்சத்திர வெயில் தொடங்கிய முதல் நாளில் ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ராசிபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை திடீரென மேகமூட்டம் ஏற்பட்டு, மழை பெய்யத்தொடங்கியது. சுற்றுவட்டாரப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்ததால், குளிா்ச்சியான தட்பவெப்ப நிலை நிலவியது. இதனால் வெயில் தாக்கத்தில் இருந்து மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனா். மேலும் இந்த மழையால் மரவள்ளி, பருத்தி, மஞ்சள் போன்றவற்றை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ராசிபுரம் நகரில் பெய்த பலத்த மழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீா் வழிந்தோடியது. போதிய வடிகால் வசதி இல்லாததால், நகரில் பல்வேறு பகுதியில் மழைநீா் தேங்கி நின்ால், வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக பழைய பேருந்து நிலையம் பகுதியில் சாக்கடைகளில் நீா் நிரம்பியதால், மழை நீா் வெள்ளம்போல சாலைகளில் தேங்கியது. இந்த மழைநீா் வடிவதற்கு பல மணி நேரமானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT