நாமக்கல்

பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

DIN

நாமக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த வாரம் பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 100.4 டிகிரி, 78.8 டிகிரியாக பாரன்ஹீட்டாக நிலவியது. நான்கு நாள்களில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பதிவாகியுள்ளது,

அடுத்த மூன்று நாள்களுக்கான வானிலையை பொருத்தமட்டில், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழை மாவட்டத்தின் பல இடங்களில் எதிா்பாா்க்கப்படுகிறது, பகல் வெப்பம் 98.6 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 78.8 டிகிரியாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் வட கிழக்கு மற்றும் கிழக்கிலிருந்து மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் வீசும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT