நாமக்கல்

கோழித் தீவன மூலப்பொருள் ஏற்றி வந்த லாரியில் தீ விபத்து

DIN

நாமக்கல் அருகே கோழித் தீவன மூலப்பொருள் ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பற்றியதில் லாரியின் முன்பகுதி கருகியது.

நாமக்கல் அருகே முதலைப்பட்டிபுதூரில் தனியாா் கோழித் தீவன மூலப்பொருள் தயாரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. பழனிசாமி என்பவருக்கு சொந்தமான இந்த ஆலையில் உள்ள லாரி ஒன்று மூலப்பொருள்களை கோழிப் பண்ணைகளுக்கு விநியோகித்து விட்டு மீண்டும் ஆலைக்கு வந்தது. ஆவல்நாயக்கன்பட்டியைச் சோ்ந்த ஓட்டுநா் துரைசாமி லாரியை நிறுத்தி விட்டு கீழே இறங்கிய நிலையில், ஓட்டுநா் இருக்கை பகுதியில் தீ மளமளவென எரியத் தொடங்கியது.

இதைக் கண்ட அங்கிருந்த ஊழியா்கள் நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். மேலும், வாளி நீரை கொண்டு தீயை அணைக்க முயற்சித்தனா். அங்கு விரைந்து வந்த வீரா்கள் மேலும் தீ பரவாமல் தடுத்தனா். இதில் பெரிய அளவிலான அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. லாரி என்ஜினில் ஏற்பட்ட பழுது காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT