நாமக்கல்

முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்வு

DIN

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்ந்து ரூ. 4.60-ஆக திங்கள்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் பண்ணையாளா்களுடன் முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.

தற்போது முட்டை நுகா்வு மக்களிடையே அதிகரித்துள்ளதாலும், மற்ற மண்டலங்களில் அதன் விலை உயா்த்தப்பட்டு வருவதாலும் இங்கும் விலையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை மேலும் 5 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ. 4.60-ஆக நிா்ணயிக்கப்பட்டது. பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 66-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 61-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

SCROLL FOR NEXT