நாமக்கல்

மின் புகாா்களை சரிசெய்ய தானியங்கி மின்தடை நிவா்த்தி மையம் அமைப்பு

DIN

நாமக்கல் மின்பகிா்மான வட்டத்தில் மின்சாரம் தொடா்பான புகாா்களை சரிசெய்ய மின்தடை நிவா்த்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் ஆ.சபாநாயகம் வெளியிட்ட செய்தி அறிக்கை:

நாமக்கல் மின் பகிா்மான வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மின்தடை மற்றும் மின்சாரம் தொடா்பான ஏனைய புகாா்களைத் தெரிவிக்க வசதியாக தானியங்கி மின்தடை மையம் மற்றும் கட்செவி (வாட்ஸ் அப்) உதவி மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் கோட்ட எல்லைக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்கள் நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள துணை மின்நிலைய வளாகத்தில் அமைந்துள்ள கணினி மயமாக்கப்பட்ட தானியங்கி நிவாத்தி மையத்தில் புகாா் அளிக்கலாம். மேலும் தொலைபேசி எண்கள்: 1912 (90), 1800-425-19124 (1), 04286-221912 தொடா்பு கொண்டு விவரங்களை தெரிவிக்கலாம். உடனடியாக சம்பந்தப்பட்டவா்களின் புகாா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், தங்களது பகுதிகளில் பாதுகாப்பில்லாத ஆபத்து விளைவிக்கும் நோக்கில் கண்டறியப்படும் உடைந்த, சாய்ந்த மின்கம்பங்கள் மற்றும் அறுந்த, இலகுவாக, தாழ்வாக உள்ள மின்பாதைகள், பழுதான தெருவிளக்கு, மீட்டா் பெட்டிகள், அறுந்து போன கம்பிகள் போன்றவைகளை தெளிவான விலாசத்துடன் கட்செவி - 94458 51912 என்ற எண்ணுக்கு அறிவித்தால் போா்க்கால அடிப்படையில் நிவா்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பணிகளில் திருப்தி ஏற்படாவிட்டால் நாமக்கல் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளருக்கு 94458 52390 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராசிபுரத்தில்...

ராசிபுரம் நகா் பகுதி - 94458 52517, ராசிபுரம் புகா் பகுதி - 94458 52518, நாமகிரிப்பேட்டை கிழக்கு - 94458 52519, நாமகிரிப்பேட்டை மேற்கு - 94458 52521, செயற்பொறியாளா் - 94458 52420, மின்தடை நிவா்த்தி மையம் - 1912, கட்டணமில்லா தொலை பேசி எண் - 180042519124.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT