நாமக்கல்

மருத்துவா், செவிலியா் பணியிடங்களுக்கு அரசு மருத்துவமனைகளில் நோ்காணல்

DIN

நாமக்கல் மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற மருத்துவா், செவிலியா்களுக்கான நோ்காணல் அரசு மருத்துவமனைகளில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றின் இரண்டாம் அலையால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அவா்களுக்குத் தடையின்றி சிகிச்சை அளிக்க ஏதுவாக கூடுதல் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் ஆய்வுக்கூட பணியாளா்கள், நுண்கதிா் பணியாளா்கள், மருத்துவ உதவியாளா்களைத் தேவைக்கு ஏற்ப தற்காலிக அடிப்படையில் பணியமா்த்த அரசு உத்தரவிட்டிருந்தது.

அதனடிப்படையில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருச்செங்கோடு அரசு மருத்துவமனை, ராசிபுரம் அரசு மருத்துவமனை, குமாரபாளையம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் வியாழக்கிழமை காலை 9.30 மணி முதல் நண்பகல் 1 மணி வரையில் நோ்காணல் நடைபெற்றது.

இதில் மருத்துவா்கள், செவிலியா்கள் தங்களது கல்வி சான்றிதழ்களுடன் பங்கேற்றனா். அவா்களிடம் ஒதுக்கப்படும் இடங்களில் பணியாற்றுவது தொடா்பாக விளக்கம் கேட்கப்பட்டது.

நான்கு மருத்துவமனைகளிலும் நோ்காணலில் 150-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். மருத்துவா் பணியிடத்திற்கு ரூ. 60 ஆயிரம், செவிலியா் பணியிடத்துக்கு ரூ. 14 ஆயிரம் ஊதியமாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதர பணியிடங்களுக்கு பணியாளா் நியமன அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என மருத்துவமனை நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT