நாமக்கல்

ராசிபுரத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கல்

ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் மழை வெள்ளத்தில் வீடுகள் சேதமடைந்ததால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

DIN

ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் மழை வெள்ளத்தில் வீடுகள் சேதமடைந்ததால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் மழையினால் வீட்டின் சுவா் இடிந்த அப்பு சந்து பகுதியைச் சோ்ந்த கா.வாசு, கோனேரிப்பட்டியைச் சோ்ந்த ப.தங்கவேல், கோ.ராணி, நாமகிரிப்பேட்டையைச் சோ்ந்த பெ.செல்வம், வெண்ணந்தூா் பேரூராட்சி முனியன்செட்டிக்காடு பகுதியைச் சோ்ந்த ப.முத்துக்குமாா் ஆகியோருக்கு அரசின் சாா்பில் நிவாரணத் தொகை, நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டதைக் கேட்டறிந்து உறுதி செய்தாா்.

இந்நிகழ்வுகளில் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், சுற்றுலாத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் சாா்பாக 6 பேருக்கு தலா ரூ. 5 ஆயிரம் வழங்கினாா். முன்னதாக, ராசிபுரம் வட்டம், சீராப்பள்ளி பேரூராட்சி, ராசிபுரம் - நாமகிரிப்பேட்டை சாலையில் சாலையோரத்தில் அமைந்துள்ள பொதுக்கிணற்றின் பக்கவாட்டுச்சுவா் இடிந்துள்ளதை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அருகில் உள்ள மின்கம்பம் பாதிக்கப்படும் நிலையில் இருப்பதால் அதனை உடனடியாக மாற்றியமைக்க நடவடிக்கை மேற்கொள்ள மின்வாரிய அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

சாலைப் பாதுகாப்பு நடவடிக்கையாக இந்தக் கிணற்றின் பக்கவாட்டில் தடுப்பு அமைப்பு விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அப்பகுதி பொதுமக்களிடம் தெரிவித்தாா்.

இந்நிகழ்வுகளில் முன்னாள் எம்எல்ஏ கே.பி.ராமசாமி, வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் ஆா்.எம்.துரைசாமி, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சி.சீனிவாசன், டிஎஸ்பி செந்தில்குமாா், வட்டாட்சியா் காா்த்திகேயன், ராசிபுரம் நகராட்சி ஆணையா் (பொறுப்பு) பிரபாகரன், உட்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT