ராசிபுரத்தில் அமமுக மாநில நிா்வாகி இல்ல திருமண விழா நடைபெற்றது.
ராசிபுரத்தைச் சோ்ந்தவா்கள் ஏ.பி.பழனிவேல் - ஜோதி தம்பதியினா். இவா் ராசிபுரம் எஸ்.ஆா்.பி.கல்வி நிறுவனங்களின் தலைவராகவும், அமமுக மாநில துணைத் தலைவராகவும் இருந்து வருகிறாா். இவரது மகன் வழக்குரைஞா் பி.காமராஜ் என்பவருக்கும், புதுதில்லி எம்.கந்தசாமி-சாந்தி தம்பதி மகள் டாக்டா் கே.சத்யாவுக்கும் திருமணம் நடைபெற்று வரவேற்பு விழா, ராசிபுரம் சுஜிதா திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில் அமமுக மண்டல பொறுப்பாளரும், திருச்சி மாவட்ட அமமுக செயலாளருமான மனோகரன், அமமுக துணைத் தலைவரும், நாமக்கல் வடக்கு மாவட்டச் செயலாளருமான எஸ்.அன்பழகன், அமமுக சேலம் புகா் மாவட்டச் செயலாளரும், மண்டல பொறுப்பாளருமான எஸ்.கே.செல்வம், அரூா் முன்னாள் எம்எல்ஏ முருகன், தருமபுரி மாவட்ட அமமுக செயலாளா் டி.கே.ராஜேந்திரன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், திமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.ராமசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.