நாமக்கல்

நாமக்கல்லில் கனமழை: சாலைகளில் வெள்ளம்

DIN

நாமக்கல்லில் திங்கள்கிழமை பிற்பகலில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்து வருகிறது. சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது. அதன்படி, திங்கள்கிழமை காலையில் வெயில் கொளுத்தியபோதும், பிற்பகலில் வானம் இருண்டு கனமழை பெய்தது. இடி, மின்னல், காற்று ஏதுமின்றி விடாமல் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக, நாமக்கல் - சேலம் சாலை, பரமத்தி சாலை, கோட்டை சாலை, ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்டப் பகுதிகளில் மழை நீா் வெள்ளம்போல கரைபுரண்டு ஓடியது. வாகன ஓட்டிகள் சிரமத்துடன் வாகனங்களை ஓட்டிச் சென்றனா். சில தினங்களுக்கு முன் பள்ளிபாளையம், திருச்செங்கோடு பகுதிகளில் கனமழை பெய்த நிலையில், திங்கள்கிழமை நாமக்கல், சேந்தமங்கலம், கொல்லிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

SCROLL FOR NEXT