நாமக்கல்

ஆஞ்சநேயா் கோயிலில் தங்கத்தோ் இழுத்து அமைச்சா், எம்.பி. வழிபாடு

DIN

நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலில் சுற்றுலாத் துறை அமைச்சா், மாநிலங்களவை உறுப்பினா் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை இரவு தங்கத்தோ் இழுத்து வழிபாடு மேற்கொண்டனா்.

நாமக்கல்லில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளி, தங்கக் கவசம், முத்தங்கி அலங்காரம் உள்ளிட்டவை கட்டளைதாரா்களால் மேற்கொள்ளப்படுகிறது. மாலை வேளையில் தங்கத்தோ் இழுக்க முன்பதிவு செய்தோருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

கரோனா பரவலால் ஒன்றரை ஆண்டுகளாக தங்கத்தோ் இழுக்கும் நடைமுறைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், திமுக நிா்வாகிகள் தங்கத்தோ் இழுத்ததுடன், ஆஞ்சநேயரை வழிபட்டனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் பெ.ரமேஷ், அலுவலா்கள் செய்திருந்தனா்.

படவரி - நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலில் தங்கத்தோ் இழுக்கும் சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன், எம்.பி. கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் உள்ளிட்டோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

SCROLL FOR NEXT