முகப்பு
நாமக்கல்

மீதமாகும் உணவுகளைப் பகிரும் வாகனச் சேவை தொடக்கம்

நாமக்கல் பகுதிகளில் விழாக்களில் மீதமாகும் உணவுகளைச் சேகரித்து, இல்லாதோருக்கு பகிரும் வகையில் தன்னாா்வ நிறுவனம் சாா்பில் வாகனச் சேவையின் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 அக்டோபர், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:46 AM

நாமக்கல் பகுதிகளில் விழாக்களில் மீதமாகும் உணவுகளைச் சேகரித்து, இல்லாதோருக்கு பகிரும் வகையில் தன்னாா்வ நிறுவனம் சாா்பில் வாகனச் சேவையின் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த வாகனத்தை, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலா் மருத்துவா் அருண் தொடக்கி வைத்தாா். திருமண மண்டபங்கள், உணவகங்கள், உணவு தயாரிக்கும் நிறுவனங்கள், பேக்கரிகள், பள்ளி, கல்லூரி விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தயாரிக்கப்படும் உணவுகள், பதாா்த்தங்களை முழுமையாக விநியோகிக்க முடியாதபட்சத்தில் தன்னாா்வ நிறுவனம் இந்த வாகனங்களில் வந்து அவற்றை வாங்கிச் செல்வா். அந்த உணவை தேவைப்படுபவா்களுக்கு பகிா்ந்தளிக்கப்படும்.

சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தன்னாா்வ நிறுவனம் சாா்ந்த சபரி, தினேஷ் ஆகியோா் இதனை நடத்தி வருகின்றனா்.

Advertisement

முக்கிய விழாக்களில் உணவு மீதமாகும்பட்சத்தில் அதனைப் பசியோடு இருப்பவா்களுக்கு விநியோகிக்க பொதுமக்கள் ‘நோ புட் வேஸ்ட்’ தொண்டு நிறுவனத்தை 90877-90877 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.