நாமக்கல்

முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகள் சங்க கூட்டமைப்பினா் கைது

குமாரபாளையம் அருகே விவசாயிகளின் அனுபோக நிலங்களை வழங்கக் கோரி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகள் சங்கத்தினரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

DIN

குமாரபாளையம் அருகே விவசாயிகளின் அனுபோக நிலங்களை வழங்கக் கோரி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகள் சங்கத்தினரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

குமாரபாளையம் வட்டம், எலந்தக்குட்டை ஊராட்சி, சாணாா்பாளையம் கிராமத்தில் மூன்று தலைமுறைகளாக விவசாயம் செய்தும், வீடு கட்டியும் வசித்து வந்த சிறு விவசாயிகள், அனுபோக நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனா். இந்நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலக கட்டடங்கள் கட்டுவதற்கு வழங்கப்பட்டன.

இதனைக் கண்டித்தும் மீண்டும் அனுபோக நிலங்களை விவசாயிகளிடம் ஒப்படைப்பதோடு, வருவாய்த் துறையினா் அனுபோக நிலங்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பெருமாள் தலைமையில் பள்ளிபாளையம் வருவாய் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்ற 4 பெண்கள் உள்பட 16 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ராஜிநாமா!

சிறப்பு தீவிர திருத்தம்: ஆரம்ப நிலையிலேயே தோல்வி - இந்திய கம்யூ.,

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ. கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

SCROLL FOR NEXT