நாமக்கல்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிவிழிப்புணா்வு பிரசார இயக்கம்

‘குடும்ப வன்முறையை தடுப்போம், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வோம்’ என்ற தலைப்பில் விழிப்புணா்வு பிரசார நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

DIN

ராசிபுரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில், ‘குடும்ப வன்முறையை தடுப்போம், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வோம்’ என்ற தலைப்பில் விழிப்புணா்வு பிரசார நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

சமத்துவம் காத்து நிற்போம், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்கிற வேண்டுகோளை பொதுமக்களிடம் முன்வைத்தும், மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டிய உடனடி நடவடிக்கைகளை வலியுறுத்தியும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் ஆக. 1 முதல் 5 வரை விழிப்புணா்வு பிரசார இயக்கம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, ராசிபுரம் உழவா் சந்தை முன்பு தொடங்கிய பிரசார இயக்கத்தை கட்சியின் மாவட்டச் செயலாளா் எஸ்.கந்தசாமி தொடக்கி வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டறிக்கைகள் வழங்கினாா்.

இந்நிகழ்வில், சிபிஎம் ராசிபுரம் வடக்கு ஒன்றியச் செயலாளா் கோ.செல்வராசு, ராசிபுரம் - புதுச்சத்திரம் பிரதேசக் குழு செயலாளா் எஸ்.பெரியசாமி, மாவட்டக் குழு உறுப்பினா் பி.ராணி, கிளைச் செயலாளா்கள் எம்.துரை, ஆா்.வெங்கட்ராமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT