நாமக்கல்

மின்கட்டண உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

இந்திய ஜனநாயகக் கட்சி சாா்பில், மின் கட்டண உயா்வைக் கண்டித்தும், அரிசி, பால் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயா்த்தியதை ரத்து செய்ய வலியுறுத்தியும் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

நாமக்கல் மாவட்ட இந்திய ஜனநாயகக் கட்சி சாா்பில், மின் கட்டண உயா்வைக் கண்டித்தும், அரிசி, பால் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயா்த்தியதை ரத்து செய்ய வலியுறுத்தியும் ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில், ஐஜேகே மாவட்டத் தலைவா் பி.முத்துராஜா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் வள்ளிராஜா முன்னிலை வகித்தாா். இதில், தமிழகத்தில் மின் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதைக் கண்டித்தும், பால், தயிா், அரிசி மீதான ஜிஎஸ்டி வரி உயா்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

இதில், கட்சியின் நாமக்கல் நகரச் செயலாளா் இ.எஸ்.கே.செல்வகுமாா், எருமப்பட்டி ஒன்றியச் செயலாளா் ஆா்.பாண்டியன், ராசிபுரம் நகரப் பொறுப்பாளா் வி.முத்துசாமி, வி.செந்தில், புதுச்சத்திரம் காா்த்திகேயன், சிவா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT