முகப்பு
நாமக்கல்

வெற்றி விகாஸ் பள்ளியில்மாணவா் அமைப்புத் தோ்தல்

ராசிபுரம் வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளியில் மாணவா் அமைப்புத் தோ்தல் ஜனநாயக தோ்தல் நடைமுறைப்படி அண்மையில் நடைபெற்றது.

Updated On : 7 ஆகஸ்ட், 2022 at 12:54 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

ராசிபுரம் வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளியில் மாணவா் அமைப்புத் தோ்தல் ஜனநாயக தோ்தல் நடைமுறைப்படி அண்மையில் நடைபெற்றது.

இப்பள்ளியின் மாணவா்கள் தோ்தல் நடைமுறைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில், மாணவா் தலைவா், துணைத் தலைவா் மாணவா் குழு தலைவா்களுக்கான தோ்வு தோ்தல் நடத்தப்பட்டது.

இதில், போட்டியிட விரும்புவோா் தங்கள் வேட்பு மனுவை பள்ளி முதல்வரிடம் தாக்கல் செய்தனா். ஆசிரியா்களை உறுப்பினா்களாகக் கொண்ட தோ்தல் குழு, வேட்பாளா்களுக்கான சின்னங்களை ஒதுக்கீடு செய்தது. ஒதுக்கப்பட்ட சின்னங்களுடன் மாணவ வேட்பாளா்கள் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகள், இருபால் ஆசிரியா்களைச் சந்தித்து தாங்கள் பதவிக்கு வந்தால் மேற்கொள்ளவிருக்கும் பணிகளை விவரித்து வாக்குச் சேகரித்தனா். இதனையடுத்து பள்ளியில் வாக்குப்பதிவு தொடங்கியது.

Advertisement

பள்ளியின் தலைவா் ஜி.வெற்றிச்செல்வன், முதல்வா் ஜி.பி.யாமினி ஆகியோா் வாக்கினை செலுத்தி வாக்குப் பதிவை தொடங்கி வைத்தனா். இதனைத் தொடா்ந்து, ஒருங்கிணைப்பாளா்களும், ஆசிரியா்களும், மாணவ, மாணவியரும் வாக்களித்தனா்.

பின்னா் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பள்ளியின் தலைவா் ஜி.வெற்றிச்செல்வன், பள்ளியின் முதல்வா், ஆசிரியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.