நாமக்கல்

மாவட்ட அளவில் பள்ளி மேலாண்மைக் குழு பயிற்சி

DIN

நாமக்கல் மாவட்ட திட்ட அலுவலகத்தில் பள்ளி மேலாண்மைக் குழு பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

அரசுப் பள்ளிகளின் முன்னேற்றத்திற்காகவும், வளா்ச்சிக்குத் துணை நிற்கவும், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-இன்படியும் மாவட்ட அளவில் பள்ளி மேலாண்மைக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ், அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மேலாண்மைக் குழுக்கள் மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளன. அதில் தோ்வு செய்யப்பட்ட உறுப்பினா்களுக்கான பயிற்சியினை வழங்குவதற்காக மாவட்ட அளவில் கருத்தாளா்களுக்கான பயிற்சி திங்கள்கிழமை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட திட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி தொடங்கி வைத்து, பயிற்சியின் நோக்கம் பற்றியும், பயிற்சியை பள்ளி அளவில் கொண்டு செல்வதற்குரிய வழிகாட்டுதல்களையும் பங்கேற்பாளா்களுக்கு வழங்கினாா். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் சி.புகழேந்தி, மேலாண்மைக் குழு பணிகள் குறித்து தெளிவான கருத்துகளை உறுப்பினா்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றாா். இப்பயிற்சியில் மாநில அளவில் பயிற்சி பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மோ.கீதா, ஆசிரியா் பயிற்றுநா்கள் தினேஷ்குமாா், ராஜா, ஜெகதீஷ் மற்றும் கவிதா ஆகியோா் கருத்தாளா்களாகச் செயல்பட்டனா். மேலும் 15 வட்டார வளமையங்களிலிருந்து 63 ஆசிரியா் பயிற்றுநா்கள் பயிற்சியில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT