நாமக்கல்

பரமத்தி வேலூா் வேளாண் சந்தையில் ரூ. 90 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

DIN

பரமத்தி வேலூா் மின்னனு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமை ரூ. 90ஆயிரத்துக்கு தேங்காய் விற்பனையானது.

பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 7ஆயிரத்து 619 கிலோ தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.24.61-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 19.29-க்கும், சராசரியாக ரூ. 23.60-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 1 லட்சத்து 81 ஆயிரத்து 706 -க்கு வா்த்தகம் நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை (ஆக.16) நடைபெற்ற ஏலத்தில் 3 ஆயிரத்து 649 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 25.16 -க்கும், குறைந்தபட்சமாக ரூ.22.90- க்கும், சராசரியாக ரூ. 24.00-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 90 ஆயிரத்து 149 க்கு விற்பனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT