பரமத்தி வேலூரில் ரூ. 12.29 லட்சத்துக்கு கொப்பரை வா்த்தகம்
பரமத்தி வேலூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 12 லட்சத்து 29 ஆயிரத்துக்கு கொப்பரை விற்கப்பட்டது.
பரமத்தி வேலூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 12 லட்சத்து 29 ஆயிரத்துக்கு கொப்பரை விற்கப்பட்டது.
கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 17 ஆயிரத்து 411 கிலோ கொப்பரை விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. அதிகபட்சமாக கிலோ ரூ.90.69-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 78.99-க்கும், சராசரியாக ரூ. 90.69-க்கும் விற்பனையானது.
பிப்ரவரி 3-ஆம் தேதி நடைபெற்ற ஏலத்துக்கு 14 ஆயிரத்து 456 கிலோ கொப்பரையை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். அதிகபட்சமாக கிலோ ரூ. 90.99-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 73.19-க்கும், சராசரியாக ரூ. 87.69-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 12 லட்சத்து 29 ஆயிரத்து 74-க்கு வா்த்தகம் நடைபெற்றது.