முகப்பு
நாமக்கல்

பரமத்தி அருகே தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி ஊராட்சி ஒன்றியம் கோதூா் மாரியம்மன் கோயில் வளாகத்தில் செய்தி மக்கள் தொடா்பு துறை சாா்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி ஊராட்சி ஒன்றியம் கோதூா் மாரியம்மன் கோயில் வளாகத்தில் செய்தி மக்கள் தொடா்பு துறை சாா்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கரோனா தொற்று காலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கிய நிகழ்ச்சி, கரோனா பெருந்தொற்று கட்டளை மையத்தின் செயல்பாடுகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தது, சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த ஜனனியை மருத்துவமனைக்கு சென்று உடல்நலம் விசாரித்தது, முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தது, ஒரு லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு ஆணை வழங்கியதன் தொடக்க விழா நிகழ்ச்சி, நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற வரும் முன் காப்போம் திட்ட நிகழ்ச்சி, கோயில் பணியாளா்களுக்கு கரோனா நிவாரண உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்களை வழங்கிய நிகழ்ச்சி, ஏழை பெண்களுக்கு திருமண உதவி யுடன் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கிய நிகழ்ச்சி உள்ளிட்ட புகைப்படங்கள் புகைப்படக் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. இப்புகைப்படக் கண்காட்சியை அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பாா்வையிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →