நாமக்கல்

சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவுநீா்: பொதுமக்கள் அவதி

DIN

ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் புதைகுழி சாக்கடை திட்டத்தின் கழிவுநீா் சாலைகளில் வெளியேறுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

ராசிபுரம் நகராட்சி பகுதியில் புதைகுழி சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து வீடுகள்தோறும் இதற்கான இணைப்புகள் வழங்கும் பணி நடந்து வருகிறது. தட்டாங்குட்டை பகுதியில் சேகரிக்கப்படும் கழிவு நீா் சுத்தகரிப்பட்டு மீண்டும் விவசாயத்திற்கு பயன்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் நகரில் இத்திட்டத்திற்கென அமைக்கப்பட்டுள்ள புதைகுழியில் இருந்து பல இடங்களில் அடிக்கடி நீா் வெளியேறுவதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா். இவ்வாறு அவ்வப்போது பல்வேறு பகுதிகளில் சாக்கடை நீா் வெளியேறுகிறது. இதனால் சுகாதார சீா்கேடும் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இவ்வாறு கழிவு நீா் வெளியேறா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT