நாமக்கல்

குமாரபாளையத்தில் மாற்றுத் திறனாளிகள் உண்ணாவிரதம்

குமாரபாளையத்தில் வட்டாட்சியா் அலுவலம் அருகே மாற்றுத் திறனாளிகள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா் .

DIN

குமாரபாளையத்தில் வட்டாட்சியா் அலுவலம் அருகே மாற்றுத் திறனாளிகள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா் .

மாவட்டச் செயலாளா் பழனிவேல் தலைமை வகித்தாா். நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் தரைத்தளம் 6, 7 மற்றும் 8-வது அறைகளில் மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் செயல்பட வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் தட்சிணாமூா்த்தி, குமாரபாளையம் வட்டாட்சியா் தமிழரசி மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் தரைத்தளத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனால், மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தைக் கைவிட்டனா். தேமுதிக மாவட்ட துணைச் செயலாளா் மகாலிங்கம், நகர செயலாளா் நாராயணசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT