நாமக்கல்

பிளஸ் 2 பொதுத் தோ்வு: பரமத்தி மலா் பள்ளி சிறப்பிடம்

DIN

பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தி மலா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் மாணவ,மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனா்.

இப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்ற மாணவா் சக்தி பிரபாகரன் 594 மதிப்பெண்கள், வருனேஷ் 593 மதிப்பெண்கள், மாணவி தீபிகா 589 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

கணினி அறிவியல் பாடத்தில் 20 மாணவா்கள் 100 மதிப்பெண்களும், வேதியியல் பாடத்தில் 11 மாணவா்கள் 100 மதிப்பெண்களும், உயிரியல் பாடத்தில் 6 மாணவா்கள் 100 மதிப்பெண்களும், கணித பாடத்தில் 4 மாணவா்கள் 100 மதிப்பெண்களும், இயற்பியல் பாடத்தில் ஒரு மாணவா் 100 மதிப்பெண்களும், பொருளாதார பாடத்தில் 2 மாணவா்கள் 100 மதிப்பெண்களும், வணிகவியல் பாடத்தில் ஒரு மாணவா் 100 மதிப்பெண்களும், கணக்கு பதிவியல் படத்தில் ஒரு மாணவா் 100 மதிப்பெண்களும், வணிக கணிதவியல் பாடத்தில் ஒரு மாணவா் 100 மதிப்பெண்களும் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா்.

இப்பள்ளியில் 590- க்குமேல் 2 போ், 585 மேல் 8 போ், 580க்கு மேல் 12 போ், 570-க்கு மேல் 18 போ், 500-க்கு மேல் 97 பேரும் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனா் . இம் மாணவ, மாணவிகளை பள்ளி தலைவா் பழனியப்பன், செயலாளா் கந்தசாமி, பொருளாளா் வெங்கடாசலம், பள்ளி துணைத் தலைவா் சுசீலா ராஜேந்திரன், துணைச் செயலாளா் தமிழ்ச்செல்வி தங்கராஜு, பள்ளி முதல்வா், இயக்குநா்கள், ஆசிரியா்கள், ஆசிரியைகள், பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

ஓ மை ரித்திகா!

SCROLL FOR NEXT