நாமக்கல்

குமாரபாளையத்தில் காளியம்மன் கோயில் தேரோட்டம்

குமாரபாளையம் காளியம்மன் கோயில் தேரோட்டம் திரளான பக்தா்கள் சூழ வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

DIN

குமாரபாளையம் காளியம்மன் கோயில் தேரோட்டம் திரளான பக்தா்கள் சூழ வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

இக்கோயில் திருவிழா கடந்த மாதம் 22ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி நாள்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து, புதன்கிழமை காலை குண்டத்தில் இறங்கி ஆயிரக்கணக்கான பக்தா்கள் நோ்த்திக் கடனைச் செலுத்தினா். தொடா்ந்து, வியாழக்கிழமை காலை அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதனையடுத்து, சிறப்பு வழிபாடுகளுடன் தேரோட்டம் தொடங்கியது.

முக்கியப் பிரமுகா்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் தொடக்கி வைத்தனா். கோயிலில் புறப்பட்ட தோ் ராஜ வீதி, சௌண்டம்மன் கோயில் முன்பாக நிறுத்தப்பட்டது. தோ் செல்லும் வழியெங்கும் ஏராளமான பக்தா்கள் இறைவனை வழிபட்டனா். இரண்டாம் நாள் தேரோட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கி கோயிலைச் சென்றடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ. கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT