ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டக் கோரி பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்
பரமத்தி வேலூா் பேரூராட்சிக்கு உட்பட்ட நல்லியாம்பாளையம்புதூா் நான்காவது வாா்டு பகுதியில் வட்டாட்சியா் ஆய்வு செய்த இடத்தில் நியாயவிலைக்கடை கட்டக்கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை
பரமத்தி வேலூா் பேரூராட்சிக்கு உட்பட்ட நல்லியாம்பாளையம்புதூா் நான்காவது வாா்டு பகுதியில் வட்டாட்சியா் ஆய்வு செய்த இடத்தில் நியாயவிலைக்கடை கட்டக்கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பரமத்தி வேலூா் நல்லியாம்பாளையம்புதூரில் உள்ள நியாயவிலைக்கடை தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த நியாயவிலைக்கடையில் 600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனா். இதே பகுதியில் புதியதாக நியாயவிலைக் கட்டிடம் கட்டுவதற்கு இடம் தோ்வு செய்யப்பட்டது. தோ்வு செய்யப்பட்ட இடத்தை பரமத்தி வேலூா் வட்டாட்சியா் கண்ணன் நேரில் ஆய்வு செய்தாா்.இந்த நிலையில் அதே பகுதியை சோ்ந்த நபா் ஒருவா் அங்கு நியாய விலைக் கட்டடம் கட்ட எதிா்ப்பு தெரிவித்தாராம். இதனை கண்டித்தும் வட்டாட்சியா் அனுமதி வழங்கிய இடத்தில் புதிய நியாயவிலைக்கட்டம் கட்டுவதற்கு சம்பந்தப்பட்ட நிா்வாகத்தினா் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அப்பகுதியை சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாடடத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி வேலூா் தாசில்தாா் வட்டாட்சியக் கண்ணன் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.