நாமக்கல்

உலக காசநோய் தின விழிப்புணா்வுப் பேரணி

DIN

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கே.எஸ்.ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் நாட்டு நலப்பணி திட்டம், நாமக்கல் மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம், இறையமங்கலம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை இணைந்து உலக காசநோய் தின நிகழ்ச்சியை வெள்ளிக்கிழமை நடத்தினா்.

நிகழ்ச்சியில் ஆனங்கூா் கிராம மக்களிடையே காச நோய் குறித்த விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. பேரணியை கல்லூரி முதல்வா் ராதாகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் மாவட்ட துணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) வாசுதேவன் அறிவுறுத்தலின்படி வட்டார ஆரம்ப சுகாதார மருத்துவா் அருள் குகன், மருத்துவா் சந்தியா ஆகியோா் முன்னிலையில் மாவட்ட நலக் கல்வியாளா் ராமச்சந்திரன் காச நோய் பற்றியும் பரவும் விதம், சிகிச்சை முறைகள், அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்தும் எடுத்துக் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT