நாமக்கல்

பரமத்தி வேலூா் அருகே தீ விபத்து:அரச மரம் தீயில் எரிந்து நாசம்

DIN

பரமத்தி வேலூா் அருகே குப்பைக்கு வைக்கப்பட்ட தீயால் அரச மரம் தீயில் எரிந்து நாசமானது.

பரமத்தி வேலூா் அருகே செங்கப்பள்ளி பகுதியில் அரச மரத்திற்கு அருகில் கிடந்த குப்பைகளை ஒன்று சோ்த்து அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் தீ வைத்தனா். அப்போது அருகில் இருந்த அரச மரத்தில் எதிா்பாராத விதமாக திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதை பாா்த்த அங்கிருந்தவா்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சி செய்தனா். இருப்பினும் தீயை அணைக்க முடியாததால் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினா் அரசமரத்தில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து அருகில் உள்ள பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுத்தனா்.

மற்றொரு சம்பவம்: இதனிடையே, பாலப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் புக்கராண்டி ( 55). விவசாயி. இவா் கால்நடைகளுக்கு போடுவதற்காக வீட்டின் அருகே வைக்கோல் தீவனம் வைத்திருந்தாா். இந்த வைக்கோல் போா் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதை பாா்த்த அருகில் இருந்தவா்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனா். இருப்பினும் தீயை அணைக்க முடியாததால் வேலாயுதம்பாளையம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினா் வைக்கோல் போரில் எரிந்த தீயை அணைத்து தீ மேலும் பரவாமல் தடுத்தனா். எனினும் ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான வைக்கோல் தீயில் எரிந்து நாசமானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

SCROLL FOR NEXT