நாமக்கல்

மே 20 முதல் அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் வரும் 20-ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.

DIN

நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் வரும் 20-ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் வெளியிட்ட அறிக்கை:

திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையடுத்து, அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நகராட்சி, பேரூராட்சிகளில் நடைபெற உள்ளது. வரும் 20-ஆம் தேதி மாலை 5 மணியளவில் நாமக்கல் பேருந்து நிலையம் அருகில் நடைபெறும் கூட்டத்தில் தலைமை பேச்சாளா்கள் செந்தூா் பாலகிருஷ்ணன், கவிச்சுடா் கவிதைப்பித்தன் கலந்து கொள்கின்றனா்.

21-ஆம் தேதி மாலை 5 மணிக்கு ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெறும் கூட்டத்தில் திமுக தோ்தல் பணிக்குழு செயலாளா் குத்தாலம் பி.கல்யாணம், தலைமை பேச்சாளா் அத்திப்பட்டு காமராஜ் பேசுகின்றனா்.

22-ஆம் தேதி மாலை 5 மணிக்கு காளப்பநாயக்கன்பட்டி, சேந்தமங்கலம் வஉசி திடலில் நடைபெற உள்ள கூட்டத்தில் திமுக கொள்கை பரப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா, தலைமை பேச்சாளா் உடன்குடி தனபால் ஆகியோா் பங்கேற்று பேசுகின்றனா்.திமுகவினா் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT