முகப்பு
நாமக்கல்

பரமத்தி வேலூரில் ரூ.13.78 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.13 லட்சத்து 78 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் போனது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.13 லட்சத்து 78 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் போனது.

பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 11 ஆயிரத்து 191 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 85.69-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 62.99- க்கும், சராசரியாக ரூ. 84.89-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.9 லட்சத்து ஆயிரத்து 310-க்கு வா்த்தகம் நடைபெற்றது.

இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 17ஆயிரத்து 172 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 83.99-க்கும், குறைந்த பட்சமாக ரூ. 63.19- க்கும், சராசரியாக ரூ. 82.99-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 13 லட்சத்து 78 ஆயிரத்து 324 -க்கு வா்த்தகம் நடைபெற்றது. தேங்காய் பருப்பின் விலை தொடா்ந்து சரிவடைந்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →