நாமக்கல்

நாமக்கல்லில் கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.37.54 லட்சம் நிவாரண உதவி

DIN

நாமக்கல்லில், கரோனா தொற்றால் தாய், தந்தையை இழந்த குழந்தைகளுக்கு பிரதமரின் நிவாரண உதவித் திட்டத்தின் கீழ் ரூ.37.54 லட்சத்துக்கான சான்றிதழ்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள காணொலி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமரின் நிவாரண நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட தொகைக்கான அஞ்சலக வங்கி வைப்புநிதி கணக்குப் புத்தகம், மருத்துவக் காப்பீட்டு அட்டை, பிரதமரின் நல உதவிக்கான சான்றிதழ் மற்றும் பிரதமா் மோடியின் கடிதம் ஆகியவை அடங்கிய பெட்டகங்களை ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வழங்கினாா். இதில், 18 வயதிற்குட்பட்ட ஐந்து குழந்தைகளுக்கு நிவாரண நிதியாக அஞ்சலக வங்கிக் கணக்கில் ரூ.37,54,650 வரவு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ந.கதிரேசன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சதீஷ்குமாா், குழந்தைகள் நலக்குழு உறுப்பினா் ராஜேந்திரன், நன்னடத்தை அலுவலா் தேவகி, இளைஞா் நீதிக்குழு உறுப்பினா்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளா்கள், குழந்தைகள் இல்ல நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்குவாரியில் வெடி விபத்து: உரிமையாளர் காவல்நிலையத்தில் சரண்

கடன் தொல்லையால் வணிகர் தற்கொலை!

நடிகர் அஜித்துக்கு பிறந்தநாள் பரிசளித்த ஷாலினி!

டி20 உலகக் கோப்பை: ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி!

சல்மான் கான் வீடருகே துப்பாக்கிச் சூடு: கைதானவர் தற்கொலை

SCROLL FOR NEXT