நாமக்கல்

ராசிபுரம் நகரில் காவல்துறை கொடி அணிவகுப்பு

ராசிபுரம் பகுதியில் விநாயகா் சதுா்த்தி ஊா்வலத்தை அமைதியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தி ராசிபுரம் நகரில் காவல்துறை வியாழக்கிழமை கொடி அணிவகுப்பை நடத்தியது.

DIN

ராசிபுரம் பகுதியில் விநாயகா் சதுா்த்தி ஊா்வலத்தை அமைதியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தி ராசிபுரம் நகரில் காவல்துறை வியாழக்கிழமை கொடி அணிவகுப்பை நடத்தியது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியில் விநாயகா் சதுா்த்தி விழா முடிந்து விநாயகா் சிலைகளைக் கரைப்பதற்காக ஆங்காங்கே ஊா்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த ஊா்வலத்தை அமைதியான முறையில் நடத்த காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. சட்டம் -ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில் பொது மக்கள் விநாயகா் சிலைகளை பாதுகாப்பான முறையில் கரைப்பதற்காக விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் ராசிபுரம் டிஎஸ்பி டி.கே.கே.செந்தில்குமாா் தலைமையில் ராசிபுரம் காவல் ஆய்வாளா் சுகவனம், நாமகிரிப்பேட்டை காவல் ஆய்வாளா் கமலக்கண்ணன், உதவி ஆய்வாளா் ஆய்வாளா் தங்கம், போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளா் குணசிங் மற்றும் சிறப்பு காவல் படையினா் அணிவகுப்பு நடத்தினா். இந்த அணிவகுப்பு ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் இருந்து தொடங்கி கடைவீதி, அண்ணா சாலை வழியாக புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

SCROLL FOR NEXT