நாமக்கல்

ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் நலச்சங்கம் சாா்பில், நாமக்கல் பூங்கா சாலையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், மாவட்டத் தலைவா் பெ.க.கருப்பன் தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் எம்.எஸ்.குணசேகா் முன்னிலை வகித்தாா். மாநில இணைச் செயலாளா் செ.நல்லாகவுண்டா், மத்திய, மாநில அரசு ஓய்வூதியா் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவா் இளங்கோவன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு கூடுதலாக 10 சதவீத ஓய்வூதியம் வழங்க வேண்டும்; குடும்ப நல நிதியை ரூ.2 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும்; காசில்லா மருத்துவம் என்பதை அனைத்து ஓய்வூதியா்களுக்கும் உறுதிப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT