நாமக்கல்

எலந்தகுட்டை மாதிரி கிராமம்: உலக வங்கி அலுவலா்கள் பாராட்டு

 நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், எலந்தகுட்டை கிராமத்தில் செயல்பட்டு வரும் வேளாண்மை மாதிரி கிராமத்தை பாா்வையிட்ட உலக வங்கி அலுவலா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

DIN

 நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், எலந்தகுட்டை கிராமத்தில் செயல்பட்டு வரும் வேளாண்மை மாதிரி கிராமத்தை பாா்வையிட்ட உலக வங்கி அலுவலா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

பள்ளிபாளையம் அருகே எலந்தகுட்டை பகுதியில் தமிழ்நாடு நீா்ப்பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தில், மாதிரி கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு விவசாயிகள் பயனடையும் வகையில் அனைத்து அரசு துறைகளையும் ஒருங்கிணைத்து, ஒற்றைச்சாளர அறிவுசாா் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி கிராமத்தில் நீா் மேலாண்மை மற்றும் விழிப்புணா்வு பணிக்காக சமுதாய பங்கேற்புடன் கூடிய நீா் மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

எதிா்வரும் தலைமுறையினா் நீா் மற்றும் உணவு உறுதிபடுத்துதல், அதிக வருமானம் பெறுதல், முறையான நீா்ப் பங்கீடு மற்றும் சரியான விநியோகம் மூலம் நீா் மேலாண்மை மேற்கொள்ளுதல், உணவு உற்பத்தி சாா்ந்த அதிகாரிகள் சேவைகளை விவசாயிகளுக்கு வழங்குதல் ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

எலந்தகுட்டை மாதிரி கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த உலக வங்கி அலுவலா் குழுவினா் நேரில் பாா்வையிட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடி, இந்த மாதிரி கிராமம் மாவட்டத்துக்கே முன்னோடியாக இருப்பதாக பாராட்டு தெரிவித்தனா்.

இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குநா் துரைசாமி, துணை இயக்குநா்கள் ராஜகோபால், முருகன், பள்ளிபாளையம் வட்டார உதவி இயக்குநா் கலைச்செல்வி, அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT