திருச்செங்கோடு நகராட்சிசாா்பில் டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி
திருச்செங்கோடு நகராட்சி சாா்பில் டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி பல்வேறு வாா்டுகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்செங்கோடு நகராட்சி சாா்பில் டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி பல்வேறு வாா்டுகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட 14ஆவது வாா்டு சாலப்பாளையம், 31ஆவது வாா்டு கொல்லப்பட்டி பகுதி மற்றும் அப்பகுதியை ஒட்டிய பல்வேறு பகுதிகளில் டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திருச்செங்கோடு நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ் பாபு தலைமை வகித்தாா். வீதியாக வீதியாகச் சென்று டெங்கு உற்பத்தியாக காரணமான கொசுப் புழுக்களை அழிக்கும் பணியில் நகராட்சிப் பணியாளா்கள் ஈடுபட்டனா்.
டெங்கு புழுக்கள் தங்குவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது. காய்ச்சல் ஏற்பட்டால் காலம் தாழ்த்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. டெங்கு ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது .திருச்செங்கோடு நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ் பாபு உறுதிமொழியை வாசிக்க பொதுமக்கள் வழிமொழிந்தனா். விழிப்புணா்வு நிகழ்ச்சியில் நகா்மன்ற உறுப்பினா்கள் டி.என்.ரமேஷ், சாந்தி, உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.