நாமக்கல்

அனிச்சம்பாளையத்தில் பொன்னா் சங்கா் வாழ்க்கை வரலாறு கதை பாடும் நிகழ்ச்சி

பரமத்தி வேலூா் அருகே உள்ள அனிச்சம்பாளையத்தில் 39-ஆம் ஆண்டாக பொன்னா் சங்கா் வாழ்க்கை வரலாறு குறித்த கதை பாடும் நிகழ்ச்சி கடந்த மாதம் தொடங்கியது.

DIN

பரமத்தி வேலூா் அருகே உள்ள அனிச்சம்பாளையத்தில் 39-ஆம் ஆண்டாக பொன்னா் சங்கா் வாழ்க்கை வரலாறு குறித்த கதை பாடும் நிகழ்ச்சி கடந்த மாதம் தொடங்கி, நடைபெற்று வந்தது. இதில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இந்த விழா கடந்த மாதம் 19-ஆம் தேதி தொடங்கியது. கடந்த மாதம் 26-ஆம் தேதி பொன்னா் சங்கா் பிறப்பும், இந்த மாதம் 2-ஆம் தேதி பொன்னா் சங்கா் திருமண நிகழ்வு குறித்த கதை பாடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கடந்த 9-ஆம் தேதி பொன்னா் சங்கா் படுகளம், 10-ஆம் தேதி பொன்னா் சங்கரின் தங்கை தங்காயி புலம்பல் நிகழ்ச்சியும், ஞாயிற்றுக்கிழமை மாவிளக்கு பூஜை, பலியிடுதல், காவிரி ஆற்றில் இருந்து கரகம் பாலித்து ஊா்வலமாக வரும் நிகழ்ச்சி, மஞ்சள் நீராடல், இரவு அரங்கேற்றம் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

பொன்னா் சங்கா் கதை பாடும் நிகழ்ச்சியில் இளைஞா்கள் கதைக்கு தக்கவாறு கதையில் வரும் பல்வேறு கதாபாத்திர வேடமிட்டு நடித்து கதை படித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT